பொங்கல் வாழ்த்து

ஆவலுடன் எதிர்நோக்கி நம்

ஆதவனின் வரவினை

ஆர்ப்பரித்து ஆனந்தக் கூத்தாடினோம்...

நம் மண்ணின் சுவையை

நம் நாவிற்கரிய வைத்த கரிய கரும்பினை படையலிட்டோம்....

ஆரோக்கியம் வாழ்வதனில்

மேம்பட்டால் அவனியெங்கும்

இன்பமாயிருக்கும் என்றெண்ணி

மஞ்சள் கிழங்கை மாலையிட்டோம்...

அன்னம் கொடுத்து உபசரிக்கும்

கலாச்சாரம் காப்பாற்ற

பயிற்றுவித்த நெற்பயிரை

பாசமுடனே பொங்கலிட்டோம்....

தன் உதிரத்திலிருந்து

உயிர்நீர் கொடுத்து தாயாய்

தன் சேயை நாவால் நக்கிக் கொடுக்கும் கோமாதாவை கொண்டாடினோம்....

புத்தாடை அணிந்து

புதிதாய் பிறந்த தையை

புவனமெங்கும் ...

குலம் வாழ

அறம் வளர

நானிலமும் செழிப்புற

வேளாண்மை ஓங்கி நமது

பாரம்பரியத்தின் புகழ்

திக்கெட்டும் பரவ

காத்திடுவோம்

நாம் நம் மண்ணின்

பெருமை சொல்லும் விவசாயத்தை...

வரும் தலைமுறைக்கு

கற்பிப்போம்...

ஐந்தாவதாய் ஒரு வேதம் உண்டு

அது நமது வேளாண்மை என்று...

தலை நிமிர்ந்து நிற்கும்

தமிழரின் பெருவிழா

ஒற்றுமையை பறைசாற்றும்

ஓங்காரமாய் ஓங்கி முழங்கும்

பொங்கலோ பொங்கல்

இது எங்கள் தமிழ் மண்ணின் திருவிழா...!!!!

- விஜிவெங்கட் நேத்ரா

Write a comment ...

Write a comment ...